அநுராதபுரம்,நுவரெலியா பாதைகள் அனைத்தும் மூடப்பட்டன
Anuradhapura
Nuwara Eliya
Floods In Sri Lanka
By Jaso
மோசமான வானிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் காரணமாக நாடு முழுவதும் பல வீதிகள் மற்றும் பாலங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் விமல் கண்டம்பி தெரிவித்துள்ளார்.
அதன்படி, நாடு முழுவதும் பிரதான சாலைகள் உட்பட 206 சாலைகள் தடைபட்டுள்ளன என்று அவர் மேலும் கூறினார்.
10 பாலங்கள் சேதமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
அத்துடன் நுவரெலியா மற்றும் அனுராதபுரம் நகரங்களுக்கான அனைத்து நுழைவு மற்றும் வெளியேறும் பாதைகளும் தற்போது தடைப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
3ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி