இரண்டு நாட்களில் அதிவேக நெடுஞ்சாலைகள் வசூல் சாதனை!
இலங்கையின் அதிவேக நெடுஞ்சாலைகளில் வாகனப் போக்குவரத்து மூலம் இரண்டு நாட்களில் 124,574,925 ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஓகஸ்ட் 26 மற்றும் 27 ஆகிய இரண்டு விடுமுறை நாட்களில் அதிவேக நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்திய வாகனங்கள் குறித்த வருமானம் பெறப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
அத்துடன் குறித்த இரண்டு நாட்களில் ஒட்டுமொத்த அதிவேக நெடுஞ்சாலை அமைப்பிலும் பயணித்த மொத்த வாகனங்களின் எண்ணிக்கை 325,316 ஆக பதிவாகியுள்ளது.
163,763 வாகனங்கள் பயணித்துள்ளன
இந்தநிலையில் ஓகஸ்ட் 26 ஆம் திகதி 163,763 வாகனங்கள் பயணித்துள்ளதுடன், அன்றைய தினம் ஈட்டப்பட்ட வருமானம் 60,409,995 ரூபாயாகும்.

ஓகஸ்ட் 27 ஆம் திகதி 161,553 வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்திய நிலையில் அன்றைய தினம் 64,164,930 ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.
இந்த இரண்டு நாட்களில் தெற்கு அதிவேக வீதி (E01) மற்றும் வெளிவட்ட வீதி (E02) ஆகியவற்றிலேயே அதிகளவிலான வாகனப் போக்குவரத்து பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 12