பார்வைக் குறைபாடுள்ள சிறுவர்களுக்கு 50,000 ரூபாய் உதவித்தொகை!
Sri Lanka
Government Of Sri Lanka
Money
By Sathangani
நாட்டிலுள்ள பார்வைக் குறைபாடுள்ள 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் கண்ணாடிகளை வாங்குவதற்கு உதவும் வகையில், 50,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படவுள்ளது.
கிராமப்புற மேம்பாடு, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளது.
குறைபாடுகள் உள்ள நபர்களுக்கான தேசிய செயலகம், ஏற்கனவே குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த 40 வயதிற்கு மேற்பட்ட பார்வைக் குறைபாடுள்ளவர்களுக்கு கண்ணாடிகளை வழங்கியிருந்தது.
கண் பரிசோதனை
அதன்படி, 22,500 நபர்களுக்கு இலவச கண் பரிசோதனைகளை மேற்கொண்டு, கண்ணாடிகளை வழங்கியுள்ளதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, 2026ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தில், மாற்றுத்திறனாளிகளுக்குக் கண்ணாடிகள் உள்ளிட்ட உதவி உபகரணங்களை வழங்குவதற்காக 21 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி