இனப்படுகொலை அச்சத்தில் உறைந்துள்ள முக்கிய நாடு
சூடானில் இனப்படுகொலை அச்சம் எழுந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சூடானின் முக்கிய நகரமான எல் பஷாரை, ஆர்.எஸ்.எப் என்ற துணை இராணுவ அதிரடிப்படை கைப்பற்றியதால் இந்த அச்சம் எழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சூடானில், அல் புர்ஹான் தலைமையிலான இராணுவம் மற்றும் முகமது ஹம்தான் டகாலோ தலைமையிலான ஆர்.எஸ்.எப் எனப்படும் துணை இராணுவப் படை இடையே அதிகாரப் போட்டி நிலவுகின்றது.
கடும் சண்டை
கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் இரு தரப்பினர் இடையே கடும் சண்டை நடந்து வருன்கிறது. மேற்கில் உள்ள டார்பூர் மாகாணத்தின் பெரும்பாலான பகுதியை ஆர்.எஸ்.எப் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.

வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகள் இராணுவத்தின் கீழ் உள்ள நிலையில், டார்பூர் மாகாணத்தின் தலைநகரான எல் -பஷாரை பல மாதங்களாக முற்றுகையிட்டிருந்த ஆர்.எஸ்.எப் தற்போது கைப்பற்றியுள்ளது.
இது சூடான் இராணுவத்திற்கு ஏற்பட்ட மிகப்பெரிய பின்னடைவாகவே பார்க்கப்படுகின்றது.
சர்வாதிகார ஆட்சி
இதற்கு முன்பு சூடானில் அரேபியர்களுக்கும் மற்றும் அரேபியர் அல்லாதவர்களுக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் இருந்து வருகின்றது.

அங்கு சர்வாதிகார ஆட்சி செய்த ஜனாதிபதி அல் பஷீர், அரேபியர் அல்லாதவரைக் கொன்றதாக போர்க்குற்றம் சாட்டப்பட்டது.
அவருக்கு ஆதரவாக அப்போது ஆர்.எஸ்.எப் படை செயல்பட்டதாக குற்றச்சாட்டு உள்ளது.
போர்க்குற்றங்கள்
இந்தநிலையில், டார்பூர் மாகாணம் அரேபியர் அல்லாதவர் அதிகம் வசிக்கும் பகுதி என்ற அடிப்படையில், அது ஆர்.எஸ்.எப் கட்டுப்பாட்டில் வந்துள்ளதால் அங்குள்ள மக்கள் அச்சத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த இரண்டு நாட்களில் 26,000 இற்கும் மேற்பட்டோர் எல் பஷாரை விட்டு வெளியேறியதாக ஐ.நா தெரிவித்துள்ளது.
மேலும், எல் பஷாரில் இரண்டு லட்சம் பேர் சிக்கியுள்ளதால் இனரீதியான போர்க்குற்றங்கள் நடக்கலாம் என ஐ.நா எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
காரைநகர் படகு தளத்தில் விழுந்த இந்தியாவின் மூலோபாய பார்வை 14 மணி நேரம் முன்
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா!
5 நாட்கள் முன்