இஸ்ரேலில் முககவசம் அணிவதற்கான விதி 15 ஆம் திகதி முதல் நீக்கம்!
covid
facemask
isravel
By Sumithiran
இஸ்ரேல் நாட்டில் முகக்கவசம் அணிவதற்கான விதிகள் எதிர்வரும் 15ம் திகதி முதல் நீக்கப்படவுள்ளது.
செய்தியாளர்களிடம் பேசிய அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் யூலி எடெல்ஸ்டீன் இதனைத் தெரிவித்தார்.
எதிர்வரும் நாட்களில் தொற்று அதிகரிக்கவில்லை என்றால் இந்தக் கட்டுப்பாடு முற்றிலும் நீக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.
நோய்த் தொற்று குறைந்து வருதால் கூட்டம், சமுக இடைவெளி, சுகாதார வழிமுறைகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் கடந்த 1ம் திகதி முதல் நீக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து முகக்கவசம் அணிவதற்கான விதிகளும் நீக்கப்பட உள்ளன.
ஆனால் இஸ்ரேல் குறிப்பிட்டுள்ள 9 நாடுகளுக்கு பயணம் செய்வதற்கான தடை, பிற நாடுகளில் இருந்து வருபவர்களுக்கான சோதனை தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்