சந்நிதி முருகன் ஆலய மகோற்சவம் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்

Jaffna Selva Sannidhi Murugan Temple
By Sathangani Aug 01, 2023 05:09 AM GMT
Report

யாழ்ப்பாணம் - தொண்டைமானாறு ஸ்ரீசெல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் தொடர்பாக இடம்பெற்ற கூட்டத்தில் பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில் வடமராட்சி வடக்கு பிரதேச செயலாளர் ஆழ்வார்ப்பிள்ளை சிறி ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களாக...

போக்குவரத்து நெருக்கடி

சந்நிதி முருகன் ஆலய மகோற்சவம் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் | Rules And Regulations Annual Festival Sannithi

மகோற்சவ காலத்தில் ஆலயச்சூழலில் ஒருவழிப்பாதை நடைமுறைப்படுத்தப்படும் என்பதுடன் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதனை தடுப்பதற்காக ஆலய பிரதான ஆற்றங்கரை பக்கத்தில் இருக்கின்ற பாதையின் ஊடாக முச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் என்பன வாகன தரிப்பிடத்திற்கு செல்ல முடியும்.

தொண்டைமானாறு ஆற்றில் முதலைகள் நடமாட்டம் காணப்படுவதால் ஆற்றில் இறங்குவதை தவிர்க்க வேண்டும். ஆலய பூசைகளின் போது ஆலய சுற்றாடலில் சுகாதார நடைமுறைகளை முறையாக பின்பற்ற தவறும் பட்சத்தில் அல்லது மீறுபவர்கள் மீது சுகாதார நடைமுறைகளின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

ஆலய தேரோடும் வீதிகளில் நடைபாதை வியாபாரிகளுக்கும் தற்காலிக கடைகளுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதுடன் மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். தனியார் காணிகளில் அமைந்திருக்கும் நிரந்தர கடைகளுக்கு அனுமதி வழங்கப்படும் என்பதுடன் புதிய கடைகளுக்கும் மற்றும் வீதியோர கடைகளுக்கும் ஆலய வீதியில் அமைக்கப்படுவதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது.

சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்

சந்நிதி முருகன் ஆலய மகோற்சவம் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் | Rules And Regulations Annual Festival Sannithi

ஆலய மகோற்சவ காலத்தில் உணவு நிலையங்கள் அமைக்கப்பட வேண்டி இருப்பின் அவ் உரிமையாளர் நாட்டின் எப்பாகத்திலாவது உணவு நிலையம் நடாத்திய அனுபவம் மற்றும் மருத்துவ சான்றிதழை கொண்டிருத்தல் வேண்டும். உணவு நிலையங்களில் உணவினை கையாள்பவர்கள் மற்றும் அன்னதான மடங்களில் பணிபுரிபவர்கள் என அனைவரும் மருத்துவச்சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். உணவு நிலையங்களிற்கான குடிநீர் பொதுச்சுகாதார பரிசோதகரினால் அனுமதிக்கப்பட்ட இடத்தில் இருந்து பெறப்பட வேண்டும்.

ஆலய ஒலிபெருக்கி பாவனை தவிர வேறு ஒலிபெருக்கி பாவனைக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

கடை உரிமையாளர்கள் ஒவ்வொரு நாளும் முறையாக கழிவகற்றல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அத்துடன் பொருட்களின் நிர்ணயிக்கப்பட்ட விலையினை மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

தேர்த்திருவிழா அன்று தேர்வீதியுலா வரும் சமயத்தில் எதிர்கொள்ளும் நெருக்கடிகளை தவிரப்பதற்காக அந்த நேரத்தில் ஆற்றங்கரை வீதியூடாக வாகனங்கள் உள் நுழைவதற்கு தற்காலிகமாக அனுமதி மறுக்கப்படும்.

அடியவர்கள் ஆசாரசீலர்களாக ஆலயத்திற்கு வருகைதருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

ஆகிய விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.



Gallery
ReeCha
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025