ரஷ்யா,சீனாவின் ஒன்றிணைவால் புஷ்வாணமானது ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு பிரேரணை
ஹோர்முஸ் நீரிணையைப் பாதுகாப்பதற்காக, தற்காப்பு மற்றும் ஒருங்கிணைந்த முயற்சிகளை வலுவாக ஊக்குவித்த வளைகுடா நாடுகளின் வரைவுத் தீர்மானத்தை, ஐ.நா. பாதுகாப்பு சபையில் ரஷ்யாவும் சீனாவும் தமது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி தடுத்து நிறுத்தியுள்ளன.
பதினொரு நாடுகள் ஆதரவாக வாக்களித்த நிலையில், இரண்டு சபை உறுப்பினர்கள் (பாகிஸ்தான் மற்றும் கொலம்பியா) வாக்களிக்காமல் விலகினர்.
மாற்றியமைக்கப்பட்ட வரைவுத்தீர்மானம்
பல வார கால பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, இந்த வரைவுத் தீர்மானம், ஆரம்பத்தில் ஏழாம் அத்தியாயத்தின் கீழ் (இராணுவப் படையைப் பயன்படுத்த அதிகாரம் அளிப்பது) இருந்து, பின்னர் ஏழாம் அத்தியாயத்தை நீக்கி, "தேவையான அனைத்து தற்காப்பு வழிமுறைகளையும் பயன்படுத்த நாடுகளுக்கு அதிகாரம் அளிப்பது" என மாற்றியமைக்கப்பட்டு, இறுதியாக தற்காப்பு முயற்சிகளை வலுவாக ஊக்குவிப்பதாக மாற்றப்பட்டது.

பஹ்ரைனின் வெளியுறவு அமைச்சர் டாக்டர் அப்துல்லத்தீஃப் பின் ரஷீத் அல் ஸயானி இந்தக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார்.
வாக்கெடுப்புக்கு முன்பு பேசிய அவர், இந்த வரைவு ஒரு புதிய யதார்த்தத்தை உருவாக்கவில்லை என்றும், மாறாக, ஈரானின் தொடர்ச்சியான விரோதப் போக்கிற்கு எதிரான ஒரு தீவிரமான பதிலடி என்றும், அது முடிவுக்கு வர வேண்டும் என்றும் சபை உறுப்பினர்களிடம் கூறினார்.
அமெரிக்கா சிவப்பு கோடுகளை தாண்டினால் ஏற்படப்போகும் பேரழிவு : ஈரான் புரட்சிகர படை விடுத்துள்ள கடும் எச்சரிக்கை
உலகிற்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்
செல்வாக்குக்காக இந்த முக்கிய நீர்வழியை ஆயுதமாக்குவதற்கு பாதுகாப்பு சபை பதிலளிக்கத் தவறினால், அது உலகிற்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும், இது மற்ற நீரிணைகள் மற்றும் நீர்வழிகளிலும் மீண்டும் நிகழக்கூடும் என்றும், உலகை ஒரு காடாக மாற்றிவிடும் என்றும் அவர் தெரிவித்தார்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |