அமெரிக்காவிற்கு ரஷ்யா பதிலடி - விதிக்கப்பட்டது உயர் மட்ட தடை
Joe Biden
Russo-Ukrainian War
United States of America
Russian Federation
By Sumithiran
ரஷ்யா விதித்த தடை
ரஷ்யாவிற்குள் நுழைவதற்கு ஜோ பைடன் மனைவி,மற்றும் மகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யா மீது அமெரிக்கா பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளது. அதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் அமெரிக்கர்களுக்கு ரஷ்யாவும் பொருளாதார தடை விதித்து வருகிறது.
இந்த நிலையில் அமெரிக்க அரச தலைவர் ஜோ பைடனின் மனைவி ஜில் பைடன், மகள் ஆஷ்லே உள்ளிட்ட 25 பேர் ரஷ்யாவிற்குள் நுழைவதற்கு தடை விதித்து அதிபர் புடின் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
ரஷ்ய எதிர்ப்பு உணர்வினை ஏற்படுத்தியதாக குடியரசு கட்சி எம்.பி.க்கள் மிட்ச் மேக்கனல், சூசன் கொலின்ஸ், பென் சாசே, ஜனநாயக கட்சி எம்.பி. கிறிஸ்டின் ஜில்லிபிராண்ட் ஆகியோருக்கும் ரஷ்யாவிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
