ரஷ்யாவை தடுக்க எங்களிடம் ஏவுகணைகள் இல்லை! பகிரங்கமாக ஒப்புக்கொண்ட ஜெலன்ஸ்கி
ரஷ்யாவின் தாக்குதல்களை எதிர்த்து தாக்குதல் நடத்தும் ஏவுகணைகள் எங்களிடம் இல்லை என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
ரஷ்யா உக்ரைனின் கட்டமைப்புகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. அந்த வகையில் கடந்த 11-ந் திகதி டிரிபில்லியா மின்சார உற்பத்தி நிலையத்தை ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியது.
இதில் உற்பத்தி நிலையம் முழுமையாக சேதம் அடைந்து 100 சதவீதம் மின்சாரம் தயாரிக்கும் திறனை இழந்ததாக ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
ஏவுகணைகள் இல்லை
இது தொடர்பாக ஜெலன்ஸ்கி கூறுகையில் "ரஷ்யா 11 ஏவுகணைகளை மின்சார உற்பத்தி நிலையம் நோக்கி வீசியது. அதில் உக்ரைன் இராணுவம் ஏழு ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தியது.
4 ஏவுகணைகள் டிரிபில்லியா மின்சார நிலையத்தை தாக்கிவிட்டது. ஏனென்றால் எங்களிடம் ஏவுகணைகளை எதிர்த்து தாக்குதல் நடத்தும் ஏவுகணைகள் இல்லை.
மின்சார நிலையத்தை பாதுகாப்பதற்கான ஏவுகணை அனைத்தும் தீர்ந்துவிட்டன" என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |