இராணுவ செலவீனங்களுக்காக பணத்தை கொட்டும் ரஷ்யா - 06 மாதங்களில் வருட பட்ஜெட்டை தாண்டி செலவு
ரஷ்ய- உக்ரைன் போர் 525 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதில் இரு தரப்பிலும் உயிர்ச்சேதமும், பொருட்சேதமும் அதிகளவில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் போரினால் ஏற்படும் செலவினங்களின் அதிகரிப்பால் ரஷ்யாவின் 2023-ம் ஆண்டிற்கான பாதீட்டில் உள்ள இராணுவ செலவினங்களுக்கான தொகை இரு மடங்காகியுள்ளது.
இராணுவ செலவினம்

2023-க்கான இராணுவ செலவுக்கு ரஷ்யா சுமார் ரூ.45 ஆயிரம் கோடி ($54 பில்லியன்) திட்டமிட்டிருந்தது.
ஆனால் முதல் அரையாண்டிலேயே இதைவிட 12 சதவீதம் அதிகம் செலவிட்டிருக்கிறது.
போரை தீவிரமாக ரஷ்யா நடத்தி வந்தால், அதனால் ஏற்படும் அதிகமான இராணுவ செலவின் காரணமாக பாதீட்டு தொகையில் விழும் துண்டு இன்னும் அதிகமாகலாம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
போரின் காரணமாக இராணுவ தளவாடங்கள், உபகரணங்கள் தொடர்புடைய உற்பத்திகள் ரஷ்யாவில் அதிகரித்திருக்கும் வேளையில் ஏற்றுமதி வருவாய் குறைந்திருப்பது மட்டுமல்லாமல் பிற தொழில்களும் போரினால் மிகவும் நலிந்து வருகிறது.
உலக பொருளாதாரம் மந்தமாக இருக்கும் சூழ்நிலையில் போர் விரைவில் முடிவுக்கு வருவது அனைத்து நாடுகளுக்கும் நல்லது என பொருளாதார வல்லுனர்கள் வலியுறுத்துகின்றனர்.