ரஷ்யாவில் பிரித்தானிய இராஜதந்திரிகளின் அங்கீகாரம் ரத்து: வலுக்கும் முறுகல் நிலை
உளவு பார்த்தல், நாசவேலை செய்தல் போன்ற குற்றம் சாட்டில் ஆறு பிரித்தானிய (United Kingdom) இராஜதந்திரிகள் அங்கீகாரத்தை ரஷ்யா (Russia) இரத்து செய்துவிட்டதாக அறிவித்துள்ளது.
ரஷ்யாவின் பாதுகாப்புச் சேவையான FSB இதனை தெரிவித்துள்ளதுடன், பிரித்தானிய இராஜதந்திரிகளின் நடவடிக்கைகள் நாட்டின் பாதுகாப்பை அச்சுறுத்துவதாகவும் தெரிவித்துள்ளது.
புடினின் எச்சரிக்கை
பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் (Keir Starmer) மற்றும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் (Joe Biden) ஆகியோருக்கு இடையே வொஷிங்டனில் பேச்சுவார்த்தை நடைபெற்ற சில மணித்தியாலங்களிலேயே இந்த நடவடிக்கையை ரஷ்யா மேற்கொண்டுள்ளது.
இதேவேளை, மேற்கத்திய நாடுகளால் தயாரிக்கப்பட்ட நீண்ட தூர ஏவுகணைகள் மூலம் உக்ரைன் (Ukraine), ரஷ்ய நிலப்பரப்பைத் தாக்க அனுமதித்தால், மேற்கு நாடுகளுடன் ரஷ்யாவுடன் நேரடியாகப் போரிடும் என்று ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |