திடீரென உக்ரைன் மீது தொடர் தாக்குதல் நடத்திய ரஷ்யா! உக்கிரமடையும் போர்க்களம்
ரஷ்யா, உக்ரைன் மீது 122 ஏவுகணைகள் மற்றும் 36 டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியதில் சுமார் 13 பேர் பலியாகியுள்ளதாக உக்ரைன் தரப்பு தெரிவித்துள்ளது.
போர் ஆரம்பித்த 22 மாதங்களில் இதுபோல் சரமாரியான தாக்குதல் எட்டு மாதங்களுக்கு பிறகு இப்போதுதான் நடந்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
வான்வழி தாக்குதல்
அந்தவகையில் நேற்று இரவு சரமாரியான வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி, உக்ரைன் 87 ஏவுகணைகள் மற்றும் 27 சாஹெத் வகை ட்ரோன்களைத் தடுத்து அழித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
18 மணி நேரம் தொடர்ந்த இந்தத் தாக்குதலில் ஏராளமான கட்டடங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள் சேதமடைந்துள்ளன.
உக்ரைன் ரஷ்யப் போர்
ரஷ்யா தன்னிடம் உள்ள அனைத்து வகையான ஆயுதங்களையும் இந்தப் போரில் பயன்படுத்துவதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
இரவு தொடங்கிய தாக்குதல் உக்ரைனின் தலைநகர் உள்பட ஆறு நகரங்கள், தெற்கு முதல் வடக்கு வரை, கிழக்கு முதல் மேற்கு வரை தாக்குதல் நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் |