சிரிய இராணுவ தள விவகாரம் : புதிர நகர்வுக்கு தயாராகும் ரஷ்யா
சிரியாவின் ஹயாத் தஹ்ரிர் அல் ஷாம் (HTS) கிளர்ச்சிக் குழுவுடன் ரஷ்யா (Russia) நேரடி தொடர்பை ஏற்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி செளியிட்டுள்ளன.
சிரியாவின் ஹயாத் தஹ்ரிர் அல் ஷாம் (HTS) கிளர்ச்சிக் குழுவுடன் ரஷ்யா நேரடி தொடர்பை ஏற்படுத்தியுள்ளதாக சர் சிரியாவிற்குள் தனது இராணுவ தளங்களை பராமரிப்பதை ரஷ்யா நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அந்நாட்டின் துணை வெளியுறவு அமைச்சர் மிகைல் போக்டானோவ் கூறிய கருத்தை மேற்கோள் காட்டியே இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
எனினும், சிரியாவில் உள்ள தூதர்கள் மற்றும் பிற வெளிநாட்டினரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் ஒழுங்கை பராமரிப்பு நடவடிக்கைகளை தமது நாடு நிறைவேற்றும் என ரஷ்யா நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
இரண்டு தளங்கள்
அத்தோடு, இஸ்லாமிய அரசில் இருந்து பயங்கரவாதிகளை எதிர்த்துப் போராடும் நோக்கத்துடன் சிரியர்களின் வேண்டுகோளின் பேரில் தமது நாட்டு படைவீரர்கள் கலந்துக்கொண்டதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது.
ரஷ்யா தற்போது சிரியாவில் இரண்டு தளங்களைக் கொண்டுள்ளது அவை டார்டஸில் ஒரு கடற்படைத் தளம் மற்றும் லதாகியா துறைமுக நகருக்கு அருகிலுள்ள கெமிமிம் விமானத் தளம் என்பனவாகும்.
சிரியாவில் பஷர் அல் அசாத்தின் ஆட்சியின் சரிவுக்குப் பிறகு தோன்றிய மிகவும் சக்திவாய்ந்த கிளர்ச்சிக் குழுவாக நுஸ்ரா முன்னணி என்ற பெயரில் அதிகாரப்பூர் அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது.
மேலும், சன்னி இஸ்லாமிய போராளிப் பிரிவு பல மேற்கத்திய சக்திகளால் பயங்கரவாத அமைப்பாக பார்க்கப்படுகிறது.
இருப்பினும், தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் இருந்து ஹயாத் தஹ்ரிர் அல் ஷாம் ஐ நீக்க முடியும் என்று இங்கிலாந்து அரசாங்கம் சமீபத்தில் கூறியமை கூறியமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |