அமெரிக்கப் படைகளிடமிருந்து கப்பலொன்றை பாதுகாக்க புறப்பட்ட ரஷ்ய படைகள்
அட்லாண்டிக் பெருங்கடலில் பயணிக்கும் ஒரு எண்ணெய் கப்பலை அமெரிக்கப் படைகள் பின்தொடர்ந்து வருவதாகவும், அதனை பாதுகாக்க ரஷ்யா ஒரு நீர்மூழ்கிக் கப்பலையும் பல கப்பல்களையும் அனுப்பியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தற்போது சம்பந்தப்பட்ட கப்பல் ஐஸ்லாந்துக்கும் பிரிட்டிஷ் தீவுகளுக்கும் இடையில் பயணித்துக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
அமெரிக்கத் தடைகளை மீறி ஈரானிய எண்ணெயைக் கொண்டு சென்றதாக இந்தக் கப்பல் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ரஷ்ய கொடி
இந்தக் கப்பல் கடந்த காலங்களில் வெனிசுலா கச்சா எண்ணெயைக் கொண்டு சென்றதாகவும் தெரியவருகிறது.

இருப்பினும், தற்போது அந்தக் கப்பல் காலியாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
வெனிசுலாவின் அண்டை நாடான கயானாவைச் சேர்ந்ததாகக் கூறப்படும் இந்தக் கப்பலுக்கு 'பேலா 1' என்று பெயரிடப்பட்டது.
பின்னர் அது 'மரினெரா' என்று மாற்றப்பட்டு ரஷ்ய கொடியுடன் சென்றதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
10 அமெரிக்க விமானங்கள்
கரீபியனில் அது வெனிசுலாவை நோக்கிச் செல்வதாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த மாதம் அமெரிக்க கடலோர காவல்படை அந்தக் கப்பலை கைப்பற்ற முயன்றது.

Image Credit: Reuters
இதன்காரணமாக குறித்த கப்பலின் கடல்வழிப் பாதை மாற்றப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
இவ்வாறானதொரு பின்னணியில், ஐரோப்பாவை நோக்கி கப்பல் செல்வதைத் தடுக்க சுமார் 10 அமெரிக்க விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் அனுப்பப்பட்டள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், கப்பலைச் சுற்றியுள்ள நிலைமையை "மிகவும் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக" ரஷ்யா அறிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
லசந்தவுக்கான நீதியை வழங்குமா அநுர அரசு! 18 மணி நேரம் முன்