உணவைக் கொடுத்து வட கொரியாவிடம் ஆயுதம் பெறும் ரஷ்யாவின் திட்டம் - சாடும் அமெரிக்கா!
ரஷ்யா வட கொரியாவுக்கு உணவுப் பொருட்களை வழங்கி அதற்குப் பதிலாக வட கொரியாவிடம் இருந்து ஆயுதங்களைப் பெறுவதற்கு திட்டமிடுவதாக கூறப்படுகின்றது.
குறித்த குற்றச்சாட்டை அமெரிக்கா முன்வைத்துள்ளது.
இது தொடர்பில் ஆலோசனை நடத்துவதற்காக ரஷ்யாவின் சிறப்பு குழுவொன்று வட கொரியா நோக்கி பயணிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாரிய உணவுத்தட்டுப்பாடு
வட கொரியா உலகின் உள்ள ஏழ்மையான நாடுகளில் ஒன்று எனவும், அங்கு பாரிய உணவுப்பற்றாக்குறை நிலவுவதாகவும் அமெரிக்கா கூறி வருவதுடன், ஆனால் இதனை வட கொரியா தொடர்ந்து மறுத்து வருகிறது.
இந்தநிலையில், ரஷ்யாவிற்கும், வட கொரியாவிற்கும் இடையிலான இந்த ஒப்பந்தமானது ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு மன்றத்தின் தீர்மானத்தை மீறும் செயற்பாடு என அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புப் பேச்சாளர் ஜான் கர்பி (John Kirby) கூறியுள்ளார்.
ஏற்கனவே, உக்ரேனில் உள்ள ரஷ்யாவின் இராணுவத்திற்கு வட கொரியா ஆயுதங்கள் வழங்குவதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியிருந்ததுடன், அதனை வட கொரியா மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.