கிளிநொச்சியில் விபத்தில் சிக்கி நால்வர் படுகாயம்...!
கிளிநொச்சியில் பேருந்தும் மற்றும் டிப்பர் வாகனமும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்து சம்பவம் இன்று (28-01-2026) இடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சி காவல் பிரிவுக்குட்பட்ட பிரிவுக்கு உட்பட்ட A9 பிரதான வீதியில் விபத்து சம்பவத்துள்ளது.
மேலதிக விசாரணை
யாழில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த அரச பேருந்துடன் முறிகண்டி பகுதியில் இருந்து மணல் ஏற்றி யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த டிப்பர் வாகனமும் ஒன்றுடன் ஒன்று மோதியே விபத்துக்குள்ளாகியுள்ளது.
டிப்பர் சாரதியின் நித்திரை கலக்கம் காரணமாக விபத்து இடம்பெற்றிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

பேருந்தின் சாரதி மற்றும் பயணிகள் இருவருடன் டிப்பர் சாரதி உட்பட நான்கு பேர் படுகாயம் அடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த விபத்து தொடர்பாக கிளிநொச்சி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |