அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி வீழ்ச்சி
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி நேற்றுடன் ஒப்பிடுகையில், இன்று (28.01.2026) சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 305 ரூபாய் 98 சதம், விற்பனை பெறுமதி 313 ரூபாய் 51 சதமாக பதிவாகியுள்ளது.
ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 421 ரூபாய், விற்பனை பெறுமதி 434 ரூபாய் 02 சதமாக பதிவாகியுள்ளது.
நாணயமாற்று வீதம்
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 365 ரூபாய் 79 சதம், விற்பனை பெறுமதி 377 ரூபாய் 50 சதம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 223 ரூபாய் 57 சதம், விற்பனை பெறுமதி 231 ரூபாய் 64 சதமாக பதிவாகியுள்ளது.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 211 ரூபாய் 77 சதம், விற்பனை பெறுமதி 221 ரூபாய் 21 சதமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 240 ரூபாய் 95 சதம், விற்பனை பெறுமதி 250 ரூபாய் 30 சதமாக பதிவாகியுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |