நிலவில் அணுமின் நிலையம்: ரஷ்யா அதிரடி - வல்லரசு நாடுகளிடையே தீவிரப் போட்டி
2036 ஆம் ஆண்டுக்குள் நிலவில் அணுமின் நிலையம் அமைக்கும் திட்டத்தை ரஷ்யா அறிவித்துள்ளது.
குறித்த அறிப்பை ரஷ்யாவின் விண்வெளி முகமையான ராஸ்காஸ்மோஸ் நிறுவனம் விடுத்துள்ளது.
இதற்காக லேவோடன் அசோசியேஷன் என்ற விண்வெளி நிறுவனத்துடன் ஒப்பந்தமும் கையெழுத்தாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அணுமின் நிலையம்
இந்த அணுமின் நிலையம், ரஷ்யா மற்றும் சீனா இணைந்து உருவாக்கி வரும் சர்வதேச நிலா ஆராய்ச்சி நிலையத்திற்கு தேவையான மின்சாரத்தை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலவில் அணுமின் நிலையம் அமைப்பது என்பது தொழில்நுட்ப ரீதியாக மிகச் சிக்கலான முயற்சி.

இருப்பினும், எதிர்கால விண்வெளி ஆதிக்கத்தையும் நிலா வளங்களை பயன்படுத்தும் உரிமையையும் உறுதி செய்ய உலகின் வல்லரசு நாடுகள் இந்தப் போட்டியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
இது வருங்காலத்தில் விண்வெளி அரசியலை புதிய கட்டத்திற்கு கொண்டு செல்லும் என சுட்டிக்காட்டப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |