ரஷ்ய அதிபர் தேர்தல் : மீண்டும் வேட்பாளராக களமிறங்கும் புடின்!
ரஷ்ய அதிபர் தேர்தலில் மீண்டும் அதிபர் வேட்பாளராக தனது பெயரை விளாடிமிர் புடின் பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி, இந்த ஆண்டு நடைபெறும் தேர்தலில், புடினுக்கு வெற்றியை இலகுவில் தனதாக்கிக் கொள்ள முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
விளாடிமிர் புடின்
ரஷ்யாவில் கடந்த 2000 ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் போட்டியிட்டு அதிகாரப்பூர்வ அதிபராக விளாடிமிர் புடின் பதவியேற்றார்.
இந்த நிலையில், அவரது தற்போதைய பதவிக்காலம் எதிர்வரும் மே மாதம் நிறைவடையவுள்ளது.
அதிபர் தேர்தல்
இதனை கருத்தில் கொண்டு, ரஷ்ய நாடாளுமன்ற மேல் சபை கூட்டத்தில், அதிபர் தேர்தலை 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 17 ஆம் திகதி நடத்துவது தொடர்பான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
பெரும்பான்மை ஆதரவுடன் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பெயர் பதிவு
இந்த நிலையில், தொடர்ந்து 4 முறை அதிபர் பதவியில் இருக்கும் புடின் மீண்டும் போட்டியிட போவதாக அறிவித்திருந்தார்.
இதையடுத்து, தனது கட்சி சார்பில் மீண்டும் அதிபர் வேட்பாளராக தன் பெயரை மத்திய தேர்தல் கமிஷனில் அவர் பதிவு செய்துள்ளார்.
இந்த தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் அதிபரானால், எதிர்வரும் 2036 ஆம் ஆண்டு வரை அவர் அதிபர் பதவியில் நீடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |