சுற்றியுள்ளவர்களுக்கு தொற்றியது கொரோனா -ரஷ்ய அதிபர் உடன் எடுத்த நடவடிக்கை
russia
self isolation
pudin
By Sumithiran
தனது உள்வட்டாரத்தில் பல பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய அதிபர் மாளிகையான கிரெம்ளின் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், அதிபர் புடினின் உள்வட்டாரத்தில் கொரோனா பரவியதையடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டதாகவும், கொரோனா பரிசோதனை செய்துகொண்டதாகவும்,புடின் பூரண நலத்துடன் இருப்பதாகவும் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், காணொளி மூலமாக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய புடின், ஒன்று இரண்டு பேர் என்று இல்லாமல் தனது உள்வட்டாரத்தில் ஏராளமானோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாக தெரிவித்தார்.