உக்ரைனுக்கு உதவ தயாராகும் ரஷ்யா
உக்ரைனின் மறுகட்டமைப்புக்கு உதவுவதற்கு ரஷ்யா பொறுப்பேற்க உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
புளோரிடா சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட ட்ரம்ப் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
தாராள மனப்பான்மை
"ரஷ்யா உதவப் போகிறார்கள். ரஷ்யா, உக்ரைன் வெற்றி பெறுவதைக் காண விரும்புகிறது.

உக்ரைனின் வெற்றியைக் காண புடின் மிகவும் தாராள மனப்பான்மை கொண்டிருந்தார். அதில் மிகக் குறைந்த விலையில் எரிசக்தி, மின்சாரம் மற்றும் பிற பொருட்களை வழங்குவது அடங்கும்.
ஆனால் புடின் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொள்ளவில்லை. ஏனென்றால் அவர் சண்டையை நிறுத்த விரும்பவில்லை.
முத்தரப்பு சந்திப்பு
ரஷ்யா, அமெரிக்கா மற்றும் உக்ரைன் இடையே முத்தரப்பு சந்திப்பு நடக்க வேண்டும்.

சரியான நேரத்தில் அதனை காண முடியும். குறித்த சந்திப்பு நடக்க வேண்டும் என்று புடின் விரும்புகிறார்.
அவர் என்னிடம் மிகவும் உறுதியாகச் சொன்னார், நான் அவரை நம்புகிறேன். முன்னதாக ரஷ்யத் தலைவருடன் தொலைபேசியில் இரண்டரை மணி நேரம் பேசியிருந்தேன்
இந்தப் போர் ஒரு சில வாரங்களில் முடிவடையும். ஆனால் அது இன்னும் நடக்காமல் போகலாம். சில வாரங்களில் ஏதாவது ஒரு வழியில் அதன் முடிவு நமக்குத் தெரியவரும்” என தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |