ட்ரம்பிற்கு விழுந்த பேரிடி :போர்நிறுத்த கோரிக்கையை ஏற்க ரஷ்யா மறுப்பு

Donald Trump Vladimir Putin Russo-Ukrainian War
By Sumithiran Apr 02, 2025 08:09 PM GMT
Sumithiran

Sumithiran

in உலகம்
Report

 உக்ரைனுடனான(ukraine) போர் நிறுத்தத்திற்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்(donald trump) முன்வைத்துள்ள பரிந்துரையை தீவிரமாக பரிசீலித்து வருவதாகவும், ஆனால் தற்போதைய வடிவத்தில் அது ஏற்றுக்கொள்ள கூடியதாக இல்லை என்றும் ரஷ்யா (russia)தெரிவித்துள்ளது.

ரஷ்யா - உக்ரைன் இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வர, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார். நிபந்தனையற்ற மற்றும் முழுமையான போர் நிறுத்தத்திற்காக அமெரிக்கா - உக்ரைன் கூட்டாக முன்வைத்த யோசனையை ஏற்றுக் கொள்ள ரஷ்யா ஜனாதிபதி புடின் சமீபத்தில் மறுத்தார்.

ட்ரம்பின் மிரட்டல் 

உக்ரைன் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது நடத்தப்படும் தாக்குதலை தற்காலிகமாக நிறுத்திக்கொள்ள ரஷ்யா ஒப்புக் கொண்டது. ஆனாலும், உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.இதனால் கோபம் அடைந்த ட்ரம்ப், ரஷ்யா, மீது கூடுதல் பொருளாதார தடை விதித்து அழுத்தம் கொடுக்கவும் தயங்க மாட்டேன் என சமீபத்தில் தெரிவித்தார்.

ட்ரம்பிற்கு விழுந்த பேரிடி :போர்நிறுத்த கோரிக்கையை ஏற்க ரஷ்யா மறுப்பு | Russia Refuses To Accept Us Ceasefire Request

அடிபணியாத ரஷ்யா

இந்நிலையில், அமெரிக்கா முன்வைத்த போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்து ரஷ்ய துணை வெளியுறவு அமைச்சர் செர்ஜி ரியாப்கோவ் கூறியதாவது: அமெரிக்காவால் முன்வைக்கப்பட்ட மாதிரிகள் மற்றும் தீர்வுகளை நாங்கள் மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறோம்.

ட்ரம்பிற்கு விழுந்த பேரிடி :போர்நிறுத்த கோரிக்கையை ஏற்க ரஷ்யா மறுப்பு | Russia Refuses To Accept Us Ceasefire Request

ஆனால் அதன் தற்போதைய வடிவத்தில் அனைத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது. நாங்கள் அறிந்த வரை, இந்த மோதலின் மூலகாரணங்கள் தொடர்பான பிரச்னைகளைத் தீர்ப்பது குறித்த எங்கள் பிரதான கோரிக்கைக்கு அதில் இடம் அளிக்கப்படவில்லை. அது சரி செய்யப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

புடினின் தொடர் அச்சுறுத்தல்: களத்தில் இறங்கிய மற்றுமொரு நாடு

புடினின் தொடர் அச்சுறுத்தல்: களத்தில் இறங்கிய மற்றுமொரு நாடு

அமெரிக்காவின் அதிரடி வரி விதிப்பு: ட்ரம்புக்கு அதிர்ச்சி கொடுத்த நெதன்யாகு

அமெரிக்காவின் அதிரடி வரி விதிப்பு: ட்ரம்புக்கு அதிர்ச்சி கொடுத்த நெதன்யாகு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025