உக்ரைனின் தாக்குதலால் மூடப்பட்ட மொஸ்கோ விமான நிலையம்!
Russo-Ukrainian War
Ukraine
Russia
By Sathangani
நேற்றிரவு (29) இடம்பெற்ற உக்ரைனின் ஆளில்லா விமானத் தாக்குதலை அடுத்து ரஷ்யாவின் மொஸ்கோ விமான நிலையம் மூடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
உக்ரைன் எல்லையில் இருந்து 500 கிலோமீற்றர் தொலைவில் உள்ள மொஸ்கோ மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 03 ஆளில்லா விமானத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு கட்டிடங்கள் சேதம்

இந்நிலையில் மொஸ்கோ விமான நிலையத்தை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டின் செய்திகள் குறிப்பிடுகின்றன.
எனினும், இந்த தாக்குதல்களில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் இரண்டு கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
முகமாலை நவீன போரியல் விதிகளை மாற்றியமைத்த ஈழத்து ஸ்டாலின்கிராட் 2 மணி நேரம் முன்
பட்டித்திடல் படுகொலையின் 39ஆவது ஆண்டு நினைவுதினம்
11 மணி நேரம் முன்
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி