உக்ரைனின் அதிரடி தாக்குதல் - முறியடித்த ரஷ்யா..!

Ukraine Russia
By Nithusan Aug 18, 2023 05:49 PM GMT
Report

ரஷ்யா தனது தலைநகரான மொஸ்கோ மற்றும் கருங்கடற் பரப்பில் உக்ரைனின் ஆளில்லா விமானங்களின் தாக்குதல் அலையொன்றை முறியடித்தாக இன்று அறிவித்துள்ளது.

ரஷ்ய பாதுகாப்பு அமைச்சின் தரவுகளின் படி இன்று அதிகாலை 4:00 மணியளவிலேயே இந்த தாக்குதல் முயற்சி நடத்தப்பட்டதாக தெரியவருகிறது.

உக்ரைன் மீதான போருக்குப் பின்னர் இவ் வருடத்தில் ரஷ்ய தலைநகர் மொஸ்கோவை மையப்படுத்திய வான் தாக்குதல்கள் அண்மைய வாரங்களில் அதிகமாக இடம்பெற்றுவருகிறது.

இதன் காரணமாக மொஸ்கோவாசிகள் தமது நகர் பாதுகாப்பானது என்ற நம்பிக்கையை இழந்துவருகிறார்கள்.

மொஸ்கோ மீது தாக்குதல் தீவிரம்

உக்ரைனின் அதிரடி தாக்குதல் - முறியடித்த ரஷ்யா..! | Russia Thwarted Ukraine S Offensive

இந்த நிலையில், ரஷ்யத் தலைநகரும் கருங்கடல் பிராந்தியத்தில் உள்ள அதன் கடற்படை இலக்குகளும் நேற்றிரவு ஒரே சமயத்தில் குறிவைக்கப்பட்டிருந்தன.

மொஸ்கோ மீது தாக்குதல் நடத்தும் வகையில் வெடிமருந்துடன் அனுப்பட்ட ஆளில்லா விமானங்கள் சுட்டுவீழ்த்தப்பட்டதாகவும் இந்த விமானங்கள் இலக்கு வைத்த கட்டிடத்துக்கு சேதம் எதுவும் ஏற்படவில்லையெனவும் நகர முதல்வர் செர்ஜி சோபியானின் தெரிவித்துள்ளார்.

மொஸ்கோ மற்றும் அதன் பெருநகர்ப் பிராந்தியத்தில் உள்ள இடங்களை குறிவைத்து கடந்த சிலவாரங்களாவே தாக்குதல் முயற்சிகள் இடம்பெற்றுவருகின்றன.

கண்காட்சி மைய கட்டமே இலக்கு

உக்ரைனின் அதிரடி தாக்குதல் - முறியடித்த ரஷ்யா..! | Russia Thwarted Ukraine S Offensive

இன்றைய தாக்குல் கிரெம்ளினில் இருந்து சுமார் 5 கிலோமீற்றர் தொலைவில் உள்ள கண்காட்சி மைய கட்டத்தை இலக்கு வைத்ததாகவும் குறிப்பிடப்பட்டள்ளது.

இதே சமகாலத்தில் கருங்கடல் பிராந்தியத்திலும் ரஷ்யா கடற்படைக்கு எதிராக நடத்தப்பட்ட ஆளில்லா கடற்கலம் மூலமான தாக்குதல் முறியடிக்கப்பட்டதாகவும் ரஷ்யா அறிவித்துள்ளது.

உக்ரைனின் தானிய ஏற்றுமதியை அங்கீகரித்த ஐ.நா.வின் ஒப்பந்தத்தை புதுப்பிக்க கடந்த மாதம் ரஷ்யா மறுத்த பின்னர், அண்மைய வாரங்களில், கருங்கடல் பிராந்தியத்திலும் ரஷ்யா கடற்கலங்களுக்கு எதிராக ஆளில்லா கடற்கலம் மூலம் தாக்குதலை நடத்தும் முயற்சிகளை உக்ரைன் அதிகரித்துவரும் நிலையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

புறப்பட்ட தானிய கப்பல்

உக்ரைனின் அதிரடி தாக்குதல் - முறியடித்த ரஷ்யா..! | Russia Thwarted Ukraine S Offensive

இதற்கிடையே ரஷ்யாவின் எதேச்சாதிகாரமான கடல் முற்றுகைக்கு மத்தியிலும், உக்ரைனில் இருந்து புறப்பட்ட முதலாவது தானிய கப்பல் நேற்று துருக்கியின் இஸ்தான்புல் துறைமுகத்தை சென்றடைந்துள்ளது.

உக்ரைனிய துறைமுகங்களில் இருந்த புறப்படும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப் போவதாக ரஷ்யா மிரட்டியிருந்தாலும் ஹொங்கொங்கை பதிவாக கொண்ட இந்த கப்பல் கடந்த புதன்கிழமை உக்ரைனின் ஒடெசா துறைமுகத்தில் இருந்து புறப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025