இலங்கைக்கு படையெடுக்கவுள்ள ரஷ்ய சுற்றுலா பயணிகள்
srilanka
russia
tourist
arrive
By Sumithiran
இந்த ஆண்டின் அடுத்த 07 மாதங்களுக்குள் 26,000 ரஷ்ய சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அழைத்து வர திட்டமிட்டுள்ளதாக உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார். அவரைப் பொறுத்தவரை, நாடு இதன் மூலம் சுமார் 40 மில்லியன் அமெரிக்க டொலர்களை சம்பாதிக்க முடியும் என எண்ணுகிறார்.
உக்ரேனிலிருந்து சுற்றுலாப் பயணிகளை அழைத்து வர முயற்சித்தவேளை பல்வேறு அபத்தமான குற்றச்சாட்டுகளை முன்வைத்து பலர் இந்த திட்டத்தை நாசப்படுத்த முயன்றதாக உதயங்க வீரதுங்க சுட்டிக்காட்டினார்.
இதனால் அந்த காலகட்டத்தில் சுமார் 15,000 சுற்றுலாப் பயணிகள் மட்டுமே இலங்கைக்கு விஜயம் செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
உக்ரேனிய சுற்றுலாப் பயணிகள் மூலம் கொரோனா பரவியிருந்தால், இலங்கையில் இருந்ததை விட மாலைதீவில் 30 மடங்கு பாதிக்கப்பட்ட மக்கள் இருந்திருப்பார்கள் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்