போரில் ரஷ்யாவிற்காக களமிறங்கும் இந்தியர்கள்: விடுக்கப்பட்ட எச்சரிக்கை
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போர் சுமார் இரண்டு ஆண்டுகளாக நீடித்து வருகின்ற நிலையில் உக்ரைன் எல்லைகளில் போரிடுவதற்கு ரஷ்ய இராணுவ வீரர்களுக்கு உதவி செய்வதற்காக இந்தியர்கள் சிலர் ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தகவல் வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவர் தெரிவித்ததாவது, "இந்தியர்கள் சிலர் ரஷ்ய ராணுவத்தில் துணை பணியாளர்களாக சேர்க்கப்பட்டுள்ள விவகாரம் எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது.
இந்திய தூதரகம்
இந்நிலையில், அவர்களை விரைவில் அங்கிருந்து வெளியேற்ற ரஷ்ய அதிகாரிகளிடம் மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரகம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
மேலும் ரஷ்யாவில் உள்ள இந்தியர்கள் உக்ரைன் போரில் இருந்து விலகி இருக்க வேண்டும் எனவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறோம்" என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |