ரஷ்யாவின் செயல்களுக்கான பதிலடி - உக்ரைன் தாக்குதலில் பலியான ரஷ்யா வீரர்கள்..!
ரஷ்யாவின் ஆகாயப் படைத் தளம் ஒன்றின்மீது உக்ரைன் மேற்கொண்ட வானூர்தித் தாக்குதலில் ரஷ்யா இராணுவ வீரர்கள் மூவர் கொள்ளப்பட்டள்ளனர்.
எங்கெல்ஸ் ஆகாயப் படைத் தளத்திற்கு அருகே குறித்த வானூர்தி சுட்டு வீழ்த்தப்பட்டபோதும் குறித்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
எங்கெல்ஸ் ஆகாயப் படைத் தளம் உக்ரைன் எல்லையிலிருந்து சுமார் 500 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
ரஷ்யாவின் செயல்களுக்கான பதிலடி
தாக்குதலுக்கு உக்ரைன் இராணுவம் அதிகாரபூர்வமாகப் பொறுப்பேற்கவில்லை. எனினும், இந்தத் தாக்குதல் உக்ரேனில் ரஷ்யாவின் செயல்களுக்கான பதிலடி என்று உக்ரைன் விமான படைப் பேச்சாளர் ஒருவர் கூறினார்.
கிறிஸ்துமஸ் திருநாளான நேற்று முன்தினம் உக்ரேனின் பல பகுதிகளில் ரஷ்யப் படைகள் தொடர் தாக்குதல்களை மேற்கொண்டன.
மேலும், சனிக்கிழமையன்று குப்பியான்ஸ்-லைமன் பகுதியில் சுமார் 60 உக்ரேனிய இராணுவ வீரர்களைத் தனது படைகள் கொன்றதாகவும் ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சு கூறியிருந்தது.
உக்ரேன்மீது தாக்குதல்கள்
Russian forces bombarded scores of towns in Ukraine on Christmas Day as Russian President Vladimir Putin said he was open to negotiations, a stance Washington has dismissed as posturing because of continued Russian attacks. | @Reuters https://t.co/4JTMsLEFcp
— Inquirer (@inquirerdotnet) December 26, 2022
பேச்சுவார்த்தை நடத்தத் தாம் தயார் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் கூறியிருந்த வேளையில் உக்ரைன்மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டமை குறித்த தாக்குதலுக்கு பின்னனியாய் அமைந்ததாக உக்ரைன் விமான படை தெரிவித்துள்ளது.
Three military personnel were killed as a result of wreckage from a Ukrainian drone falling on a military base in Russia's Saratov region, Russian agencies reported citing the country's defense ministry. pic.twitter.com/XZVxICWlFR
— Mahdi Rizvi (@MehdiRizvi123) December 26, 2022
புட்டின் அவ்வாறு கூறியது பாசாங்குதான் என்றும், ஐக்கிய நாட்டு நிறுவன பாதுகாப்பு மன்றத்தின் நிரந்தர உறுப்பினர் தகுதியை ரஷ்யாவிடமிருந்து பறிக்குமாறு உக்ரைன் குரல் கொடுக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் உக்ரைன் வெளியுறவு அமைச்சர் ட்மிட்ரோ குலோபா தெரிவித்துள்ளார்.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்
