உக்ரைனை திணறடித்த ரஸ்யாவின் நெற்றிப்பொட்டு அடி..! 6 தொன் எடையுள்ள ஏவுகணை மூலம் பாரிய தாக்குதல்
உக்ரைனிய நகரமான டினிப்ரோவில் பொதுமக்களின் அடுக்குமாடி குடியிருப்புகளை குறி வைத்து, விமானம் தாங்கி கப்பல்களை அழிக்கக்கூடிய 6 தொன் எடையுள்ள ஏவுகணைகளால் ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது.
Kh-22 என்றும் அழைக்கப்படும் X-22 ஐப் பயன்படுத்தி இந்த ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மேலும் "கேரியர் கொலையாளிகள்" என்றும் அழைக்கப்படும் இந்த ஆயுதம், பனிப் போரின் போது அமெரிக்காவின் விமானம் தாங்கி கப்பல்களை அழிக்க ரஷ்ய பொறியாளர்களால் முதன் முதலில் வடிவமைக்கப்பட்டது.
21 பேர் வரை உயிரிழப்பு
52வது ஹெவி பாம்பர் ஏவியேஷன் ரெஜிமென்ட்டின் மூலோபாய குண்டுவீச்சு விமானங்கள் டினிப்ரோவில் இதுபோன்ற ஐந்து குண்டுகளை வீசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் சுமார் 3500 மைல்கள் வேகத்தில் இலக்கை நோக்கி பறந்து வந்த ஏவுகணைகளில் ஒன்று டினிப்ரோவில் உள்ள ஒன்பது மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பை தாக்கியது.
இந்த தாக்குதலில் 15 வயது சிறுமி உயிரிழந்துள்ளதுடன் 21 பேர் வரை கொல்லப்பட்டனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ரஷ்யாவின் இந்த கோரத் தாக்குதலில் 40க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கி உள்ளனர்.
சுட்டு வீழ்த்தும் திறன் எங்களிடம் இல்லை
இந்தநிலையில், X-22 போன்ற ஆயுதங்களை சுட்டு வீழ்த்தும் திறன் தங்கள் இராணுவத்திற்கு இல்லை என்று உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து விமானப்படை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ள தகவலில், உக்ரைனின் ஆயுதப் படைகளிடம் இந்த வகை ஏவுகணையை சுட்டு வீழ்த்தும் திறன் கொண்ட ஃபயர்பவர் இல்லை என்று குறிப்பிட்டுள்ளனர்.


கிழக்கில் தமிழர் இனவழிப்பு:காணாமல் போன அம்பாறை வயலூர் கிராமம் 9 மணி நேரம் முன்
