உக்ரைன் நகரங்கள் மீது ரஷ்யா கோர தாக்குதல்
உக்ரைனின் (Ukraine) கடற்கரை நகரத்தின் மீதான ரஷ்யாவின் (Russia) ட்ரோன் தாக்குதலில் 2 பேர் உயிரிழந்துள்ளதுடன் ஏராளமானோர் படுகாயமடைந்தாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
ஒடேசா எனும் கடற்கரை நகரத்திலுள்ள ஏராளமான கட்டடங்கள், வீடுகள், ஒரு பாடசாலை மற்றும் அங்குள்ள கடைகள் மீது இன்று (01.05.2025) அதிகாலை இந்த ட்ரோன் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து, வெளியான காணொளியில் , தாக்குதலில் அங்குள்ள கட்டடங்களில் தீப்பற்றி எரிவதும் அதனை அணைக்க தீயணைப்புப் படையினர் போராடுவதும் பதிவாகியுள்ளது.
பலஸ்டிக் ஏவுகணை
இதேபோல், உக்ரைனின் இரண்டாவது மிகப் பெரிய நகரமான காரிவ் மீதான ட்ரோன் தாக்குதலில் அங்குள்ள எரிபொருள் நிலையம் வெடித்து சிதறியுள்ளது.
இதுகுறித்து, உக்ரைனின் விமானப் படை கூறுகையில், ரஷ்யா 170 ட்ரோன்களை உக்ரைனின் 5 நகரங்களுக்குள் அனுப்பி நேற்று (30.04.2025) தாக்குதலில் ஈடுபட்டதாகவும் அதில் 74-க்கும் மேற்பட்டவை அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்துடன், ரஷ்யா உக்ரைன் மீது பலஸ்டிக் ஏவுகணை கள் மூலமாகவும் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்நிலையில், உக்ரைனின் 8 ட்ரோன்களை சுட்டுவீழ்த்தியுள்ளதாக ரஷ்ய இராணுவம் தெரிவித்துள்ளது.
இரண்டாம் உலகப் போரின் வெற்றி நாளை முன்னிட்டு ரஷ்ய ஜனாதிபதி விளாதிமீர் புடின் அடுத்த வாரம் 72 மணி நேர போர்நிறுத்தம் கடைபிடிக்கப்படும் என அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
