நள்ளிரவு நேரம் கட்டுநாயக்காவில் தரையிறங்கிய ரஷ்ய விமானம்
Bandaranaike International Airport
Sri Lanka
Flight
Russia
By Sumithiran
தாய்லாந்தினால் இலங்கைக்கு அன்பளிப்பு செய்யப்பட்ட முத்துராஜா என்ற யானையை சிகிச்சைக்காக ஏற்றிச் செல்வதற்காக ரஷ்ய சரக்கு விமானம் நேற்று (30) இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக விமான நிலையத்திற்கு பொறுப்பான அதிகாரி தெரிவித்தார்.
இந்த A.Z.S-5701 என்ற சரக்கு விமானம் ரஷ்யாவின் மொஸ்கோவில் இருந்து நேற்று இரவு 11.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.
சிகிச்சைக்கு செல்லவுள்ள முத்துராஜா
முத்துராஜா யானை இன்று (01) நள்ளிரவு 12.00 மணிக்கு தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு செல்ல உள்ளது.
முத்துராஜா யானையை ஏற்றிக்கொண்டு இந்த ரஷ்ய விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து தாய்லாந்தின் பாங்கொக் நோக்கி நாளை (02) அதிகாலை 03.00 மணியளவில் புறப்பட உள்ளதாக விமான நிலையத்திற்கு பொறுப்பான அதிகாரி மேலும் தெரிவித்தார்.
