மற்றுமொரு நாட்டின் வான்வெளியில் எல்லை மீறிய ரஷ்ய போர் விமானங்கள்
அண்மையில் போலந்து(poland) மற்றும் ருமேனியா(rumania) நாடுகள் மீது ரஷ்ய ட்ரோன்கள் பறந்ததாக தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது ரஷ்ய போர் விமானங்கள் தங்கள் வான்வெளியை மீறியுள்ளதாக எஸ்டோனியா (Estonia)தெரிவித்துள்ளது.
நேற்று(19) வெள்ளிக்கிழமை மூன்று ரஷ்ய மிக்-31 போர் விமானங்கள் நேட்டோ உறுப்பு நாடான எஸ்தோனியா வான்வெளியில் "அனுமதியின்றி நுழைந்து மொத்தம் 12 நிமிடங்கள் அங்கேயே இருந்ததாக அந்த நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ரஷ்ய போர் விமானங்களை துரத்திய நேட்டோ விமானங்கள்
நேட்டோவின் கிழக்குப் பகுதியை வலுப்படுத்தும் பணியின் கீழ் இத்தாலி, பின்லாந்து மற்றும் சுவீடன் ஆகிய நாடுகளின் விமானங்கள் குறித்த விமானங்களை துரத்தி தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது "ரஷ்ய பொறுப்பற்ற நடத்தைக்கும் நேட்டோவின் பதிலளிக்கும் திறனுக்கும் மற்றொரு எடுத்துக்காட்டு" என்று நேட்டோ செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும் எஸ்தோனியா வான்வெளியில் அத்துமீறி பறந்ததாக வௌியான தகவலை ரஷ்யா மறுத்துள்ளது.
நான்குமுறை அத்துமீறல்
எனினும் "இந்த ஆண்டு ஏற்கனவே ரஷ்யா எஸ்தோனிய வான்வெளியை நான்கு முறை அத்துமீறியுள்ளது, இது ஏற்றுக்கொள்ள முடியாதது, ஆனால் மூன்று போர் விமானங்கள் நமது வான்வெளிக்குள் நுழைந்த இந்தஅத்துமீறல் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வெட்கக்கேடானது" என்று வெளியுறவு அமைச்சர் மார்கஸ் சாக்னா கூறினார்.
ரஷ்ய போர் விமானங்களின் அத்துமீறல் அப்பகுதியில் பதற்றத்தை அதிகரிக்க செய்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
