இந்திய மருந்து நிறுவனம் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்
Russo-Ukrainian War
India
Russia
By Sumithiran
சர்வதேச நாடுகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, உக்ரைன் (ukraine)மீது ரஷ்யா(russia) தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில், ரஷ்யா ஏவிய ஏவுகணை ஒன்று இந்திய (india)மருந்து நிறுவனத்தின் குடோனை தாக்கியது.
இதுதொடர்பாக உக்ரைனுக்கான இந்தியத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:
ரஷ்யா ஏவுகணை தாக்குதல்
உக்ரைனின் குசும் நகரில் உள்ள இந்திய மருந்து நிறுவனத்தின் குடோனை ரஷ்ய ஏவுகணை ஒன்று தாக்கியது.
இந்தியாவின் நட்பு நாடு என கூறும் ரஷ்யா, இந்திய வணிகங்கள் மீது வேண்டும் என்றே தாக்குதல் நடத்தியது. இதன்மூலம் குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கான மருந்துகள் அழிகின்றன என தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி