ரஷ்ய படையினர் மூர்க்கத்தனமான ஏவுகணை தாக்குதல் - குழந்தை உட்பட பலர் பலி (படம்)
Russo-Ukrainian War
Ukraine
By Jaso
உக்ரைனின் தெற்கு ஒடேசா பகுதியில் ரஷ்ய படையினர் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களில் ஒரு குழந்தை உட்பட குறைந்தது 20 பேர் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அவசர சேவையான DSNS, Serhiyivka கிராமத்தில் உள்ள ஒன்பது மாடி கட்டடத்தில் இருந்தவர்களில் 16 பேர் ஏவுகணை தாக்குதல்களால் கொல்லப்பட்டதாக கூறுகிறது.

மற்றொரு கிராமத்தில் உள்ள விடுமுறை விடுதி மீது நடத்தப்பட்டதாக்குதல்களில் குழந்தை உட்பட மேலும் நான்கு பேர் கொல்லப்பட்டனர்.
கடந்த சில நாட்களில் உக்ரைன் நகரங்கள் மீது ரஷ்ய படையினர் டசின் கணக்கான ஏவுகணைகளை வீசி வருவதாக தெரிவிக்கப்படுகிறது
வெள்ளிக்கிழமை கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், ரஷ்யா பொதுமக்களின் இலக்குகளைத் தாக்குவதாக தெரிவிக்கும் குற்றச்சாட்்டுக்களை அடியோடு மறுத்தார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்