ரஷ்யா அதிரடி : உக்ரைன் படைகளின் பயிற்சித்தளம் நிர்மூலம்
உக்ரைன் இராணுவப் பயிற்சித் தளத்தின் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில், அந்நாட்டின் 3 ராணுவ வீரர்கள் பலியாகியதுடன் 18 பேர் படுகாயமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைனின் செர்னிஹிவ் பகுதியில் அமைந்திருந்த இராணுவப் பயிற்சி மையத்தின் மீதே ரஷ்யா நேற்று (ஜூலை 29), ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தியுள்ளது.
உக்ரைனின் 169-வது இராணுவப் பயிற்சி மையத்தின் மீது தாக்குதல்
இதுகுறித்து, ரஷ்யாவின் பாதுகாப்புத் துறை அமைச்சகம் கூறுகையில், செர்னிஹிவ் மாகாணத்தின், ஹொன்சாரிவ்ஸ்கே பகுதியில் அமைந்திருந்த உக்ரைனின் 169-வது இராணுவப் பயிற்சி மையத்தின் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறியுள்ளது.
இந்தத் தாக்குதல்களில், ஸ்காந்தர் ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டதாகவும், அதனால், சுமார் 200 உக்ரைன் வீரர்கள் கொல்லப்பட்டிருக்கவோ அல்லது படுகாயமடைந்திருக்கவோ வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் குடியிருப்புகள் மீது அதிகரித்த தாக்குதல்
இதேவேளை ரஷ்யா மக்கள் குடியிருப்புகள் அதிகமுள்ள பகுதிகளின் மீது தனது தாக்குதல்களை அதிகரித்துள்ளதாகக் குற்றம்சாட்டப்படுகிறது.
மேலும், 78 ட்ரோன்கள், 8 அதி நவீன போர் விமானங்கள் ஆகியவை மூலம் உக்ரைன் நகரங்களின் மீது, நள்ளிரவில் நடத்தப்பட்ட தாக்குதல்களில், 5 பேர் படுகாயமடைந்துள்ளதாக, உக்ரைனின் விமானப் படை தகவல் வெளியிட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
