கட்டுநாயக்காவில் வந்திறங்கிய ரஷ்ய நாட்டவர் கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கிய ரஷ்ய பிரஜை ஒருவரை காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
ரஷ்ய(russia) நாட்டைச் சேர்ந்த 34 வயதான தகவல் தொழில்நுட்ப அதிகாரியே கைது செய்யப்பட்டவராவார்.
கைப்பற்றப்பட்ட"குஷ்" போதைப்பொருள்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கிய அவரின் பயணப்பொதியை சோதனையிட்டவேளை, அதிலிருந்து ஒரு கோடி ரூபாய் பெறுமதியான "குஷ்" போதைப்பொருளை காவல்துறை போதைப்பொருள் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
அவர் இந்த குஷ் போதைப்பொருளை பயிரிட்டு, தயாரித்து, உலகம் முழுவதிலும் உள்ள நாடுகளில் விநியோகம் செய்பவர் என ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடற்பாசியால் செய்யப்பட்ட தலையணையில் மறைத்து வைப்பு
அவர் கொண்டு வந்த சூட்கேஸில் கடற்பாசியால் செய்யப்பட்ட தலையணையில் மறைத்துவைக்கப்பட்ட 01 கிலோ 50 கிராம் குஷ் போதைப்பொருள், காவல்துறை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவல்துறை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |