அணு ஆயுத கப்பல்களை ஆர்டிக்கில் நிலைநிறுத்திய ரஷ்ய - நோர்வே உளவுத்துறை அதிர்ச்சி தகவல்
கடந்த 30 ஆண்டுகளில் முதல் முறையாக அணு ஆயுத போர் கப்பலை ரஷ்யா ஆர்க்டிக் கடல் எல்லையில் நிலைநிறுத்தி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் அடுத்த கட்டத்திற்கு முன்னேறி இருக்கும் நிலையில், ரஷ்யாவை எதிர்த்து தொடர்ந்து போராட கூடுதலான ஆயுதங்கள் வேண்டும் என்ற கோரிக்கையை அதிபர் ஜெலென்ஸ்கி மேற்கத்திய நாடுகளிடம் முன்வைத்திருக்கிறார்.
இதற்கிடையில் போர் ஆரம்பித்து ஓராண்டு நிறைவடையுள்ள காலத்தில், உக்ரைனிய எல்லையில் படைகளை குவித்து, மீண்டும் ஒரு புதிய முழுநீள தாக்குதலுக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தயாராகி வருகிறார்.
அணு ஆயுதம் தாங்கிய போர்க்கப்பல்
இதற்காக இரு நாட்டு எல்லைகளிலும் 5,00,000 என்ற அளவிலான இராணுவ துருப்புகளை புடின் களமிறக்கி இருக்கிறார் என தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில் 30 ஆண்டுகளில் முதல் முறையாக ஆர்க்டிக் பகுதியில் அணு ஆயுதம் தாங்கிய போர்க்கப்பல்களை ரஷ்யா நிலை நிறுத்தியுள்ளதாக புதிய உளவுத்துறை அறிக்கை தெரிவித்துள்ளது.
மேற்கு நாடுகளை எச்சரிக்கும் வகையில் அலாஸ்காவிற்கு அருகே ரஷ்யா தனது இரண்டு Tu-95 பியர் அணு குண்டு வீச்சை அனுப்பியுள்ளது.
நோர்வே உளவுத்துறை
#ALERT: Norwegian Intelligence confirmed that Russia has deployed tactical nuclear weapon-armed vessels in the Baltic Sea.
— Mario Nawfal (@MarioNawfal) February 14, 2023
Yet NATO sends tanks and contemplates jets to Ukraine
Are we underestimating Russia's willingness to use nuclear weapons? pic.twitter.com/CUh8ZR86Z9
இது தொடர்பாக நோர்வே உளவுத்துறை அறிக்கை குறிப்பிட்டுள்ள தகவலில்,
"அணுசக்தி ஆற்றலின் முக்கிய பகுதியான நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் அணு ஆயுத கப்பல்கள் வடக்கு கடற்படையில் ரஷ்யா நிலைநிறுத்தப்பட்டுள்ளது“ என தெரிவித்துள்ளது.
உக்ரைனில் போர் ஆரம்பத்திடல் இருந்து ரஷ்யாவிற்கு அணு ஆயுதங்களின் முக்கியத்துவம் கணிசமாக அதிகரித்துள்ளது. பனிப்போரின் போது வடக்கு கடற்கரையில் முன்னாள் சோவியத் யூனியனின் கப்பல்கள் வழக்கமாக அணு குண்டுகளுடன் கடலுக்குச் சென்றன.
ஆனால் நவீன ரஷ்யா உருவான பிறகு அணு ஆயுத கப்பல்கள் வடக்கு கடற்கரை பகுதியில் நிலை நிறுத்தப்பட்டு இருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது
