உக்ரைனின் சொந்த முயற்சிக்கு கிடைத்த வெற்றி : கதி கலங்கும் ரஷ்யா
1500 கி.மீ. தூரம் சென்று இலக்குகளை துல்லியமாக தாக்கும் ட்ரோன்களை உக்ரைன் தனது சொந்த முயற்சியில் உருவாக்கியுள்ளது.
இந்த ட்ரோன்களை கொண்டு ரஷ்யாவின் எண்ணெய் ஆலைகளை தாக்கி வருவதால் ரஷ்யாவிற்கு புதிய சிக்கல் எழுந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.. இன்று(29) ரஷ்யா நாட்டிற்குள் சுமார் 1500 கி.மீ. தூரம் நுழைந்து பெர்ம் பிராந்தியத்தில் உள்ள எண்ணெய் ஆலையை தாக்கியதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
ரஷ்ய எண்ணெய் ஆலைகளை குறிவைத்து தாக்குதல்
கடந்த இரண்டு வாரங்களில் ரஷ்யாவின் பல எண்ணெய் ஆலைகளை குறிவைத்து உக்ரைன் தாக்குதல் நடத்தியுள்ளது.

ரஷ்யா போரை நீடிக்க மிகவும் உதவியாக இருக்கும் எண்ணெய் விற்பனையை குறிவைத்து தங்களுடைய நீண்ட தூர தாக்குதலை விரிவுபடுத்தியுள்ளோம் என உக்ரைன் தெரிவித்துள்ளது.
உக்ரைன் பாதுகாப்புப்படைக்கு ஜெலன்ஸ்கி நன்றி
துல்லியமான தாக்குதல் நடத்தியதற்காக உக்ரைன் பாதுகாப்புப்படைக்கு ஜெலன்ஸ்கி நன்றி தெரிவித்துள்ளார்.

தற்போது 1500 கி.மீ. தூரம் வரை சென்று தாக்குதல் நடத்தும் ட்ரோன்களை பயன்படுத்தி வருகிறோம். இந்த தூரம் இன்னும் நீடிக்கும் வகையில் தொடரும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |