ரஷ்ய அதிபர் புடினுக்கு மைத்திரி அவசர கடிதம்!!
இலங்கையில் தடுத்து வைக்கப்பட்ட ரஷ்ய விமானம் தொடர்பில், முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
குறித்த கடிதத்தில், " நமது இரு நாட்டு அரசாங்கங்களுக்கும் இடையிலான நம்பிக்கையையும் பரஸ்பர மரியாதையையும் குலைத்துள்ளது.
இந்த தடை உத்தரவானது,ஈஸ்டர் தாக்குதல்கள் மற்றும் கொரோன ஆகியவற்றிலிருந்து மீண்டு வரும் சுற்றுலாத்துறைக்கு பேரழிவு தரும் அடியாக இருக்கும்.
எனது நாடும், மக்களும் வரலாற்றில் மிக மோசமான பொருளாதார நெருக்கடியை சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள்.
நாங்கள் தற்போது எரிபொருள் தட்டுப்பாடு, மின்வெட்டு மற்றும் உணவு நெருக்கடியை எதிர்நோக்கி வருகிறோம்.
எனவே, எங்கள் நம்பிக்கைக்குரிய நண்பர்களின் உதவியும் ஆதரவும் எங்களுக்குத் தேவைப்படும்.
நமது பழமையான மற்றும் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான ரஷ்யாவின் உதவி எங்களுக்கு முக்கியமானதாக இருக்கும்" என அவர் குறிப்பிட்டார்.
ஏரோஃப்ளோட் விமானத்திற்கு விதிக்கப்பட்ட தடை
ரஷ்ய ஏரோஃப்ளோட் விமானம் இலங்கையிலிருந்து புறப்படுவதற்கு கொழும்பு வர்த்தக உயர் நீதிமன்றம் அண்மையில் தடைவிதித்திருந்தது.
பல்வேறு தரப்புகளிடமிருந்து வந்த நெருக்கடிகளாலும் சட்டமா அதிபரின் கோரிகையாலும் விதிக்கப்பட்ட தடை உத்தரவை கொழும்பு வர்த்தக உயர் நீதிமன்றம் இடைநிறுத்தி புதிய உத்தரவை நேற்று பிறப்பித்தது.
தடை விதிக்கப்பட்டமைக்கான பின்புலம் குறித்த அறிய கீழ்வரும் செய்தியுடன் இணையவும்.
பூதாகரமாக வெடித்த ரஷ்ய விமான தடை! நீதிமன்றம் பிறப்பித்த புதிய உத்தரவு