இலங்கைக்கு சுற்றுலா வந்த ரஷ்ய பயணி : பெரும் ஆபத்திலிருந்து மீட்பு
Sri Lanka Police
Matara
Sri Lanka Tourism
Russian Federation
By Sumithiran
இலங்கைக்கு(sri lanka) சுற்றுலா வந்த ரஷ்ய (russia)பயணி ஒருவர் பெரும் ஆபத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளார். 37 வயதான ரஷ்ய பயணிக்கே இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
குறித்த பயணி மாத்தறைக்கு (matara)நேற்றையதினம்(12) சென்ற நிலையில் கடலில் நீராடச் சென்றுள்ளார்.இதன்போது அவர் கடலில் மூழ்கியுள்ளார்.
காவல்துறை உயிர்காப்பாளர்களால் சுற்றுலாப் பயணி மீட்பு
எனினும் சம்பவம் நடந்த நேரத்தில் கடற்கரையில் பணியில் இருந்த இரண்டு காவல்துறை உயிர்காப்பாளர்களால் சுற்றுலாப் பயணி மீட்கப்பட்டார்.
மீட்கப்பட்ட சுற்றுலாப் பயணி 37 வயதுடைய ரஷ்ய நாட்டவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அண்மைக்காலமாக இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகள் தொடருந்தில் பயணம் செய்யும் போது செல்பி மோகத்தால் விழுந்து காயமடைவது, கடலில் நீராடச் செல்லும் போது அலையில் அடித்துச் செல்லும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி