உத்திக பிரேமரத்னவின் வெற்றிடத்திற்கு எஸ்.சி.முத்துகுமாரன : தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு
நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்னவின் பதவி விலகலை அடுத்து ஏற்பட்ட நாடாளுமன்ற வெற்றிடத்திற்கு எஸ்.சி.முத்துகுமாரன தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக்க பிரேமரத்ன தமது பதவி விலகல் கடிதத்தை நாடாளுமன்ற பிரதி பொது செயலாளர் சமிந்த குலரத்னவிடம் கடந்த 27ஆம் திகதி கையளித்தார்.
உத்திக பிரேமரத்ன பதவி விலகல்
இதனையடுத்து, அநுராதபுர மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான உத்திக பிரேமரத்ன அந்த பதவியில் இருந்து விலகியமையினால், நாடாளுமன்ற வெற்றிடம் நிலவுவதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகமான குஷானி ரோஹனதீர, எழுத்து மூலம் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு அறியப்படுத்தியிருந்தார்.
இந்தநிலையில், கடந்த பொதுத் தேர்தலின் போது, சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் உத்திக பிரேமரத்னவுக்கு அடுத்ததாக அதிகூடிய வாக்குகளைப் பெற்றிருந்த, எஸ்.சி முத்துகுமாரன நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை அதற்கான பெயரை வர்த்தமானியில் அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஆனையிறவில் மகிந்த துவக்கிய அடையாள அழிப்பை அநுர தொடரும் முயற்சியா ! 6 மணி நேரம் முன்
