அமெரிக்கன் பிரீமியர் லீக்கில் இணையும் இலங்கையின் பிரபல வீரர்
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அஞ்ஜலோ மேத்யூஸ் அமெரிக்கன் பிரீமியர் லீக்கில் இணைவதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளார்.
அமெரிக்காவில் நடைபெறும் மிகப்பெரிய லீக் கிரிக்கெட் போட்டியான இந்தப் போட்டியில் இலங்கை கிரிக்கெட் வீரர் பானுகா ராஜபக்சேவும் இணைந்துள்ளார்.
2023 உலக கிண்ணக் கிரிக்கெட்டில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியொன்றில் சதீர சமரவிக்ரம ஆட்டமிழந்து வெளியேறிய பின்னர் அடுத்த வீரராக அஞ்ஜலோ மெத்தியூஸ் ஆடுகளம் நுழைந்திருந்தார்.
ஆட்டமிழப்பு
அதன் போது தவறான தலைக் கவசத்தை எடுத்துவந்ததால் அதனை மாற்ற வேண்டும் என மைதான நடுவரிடம் மெத்தியூஸ் கோரினார்.
அத்தோடு, அதனை மாற்றுவதற்கு மேலதிக நேரத்தை அஞ்சலோ மெத்தியூஸ் எடுத்துக்கொண்டதால், அவர் ஆட்டமிழந்ததாக நடுவரால் அறிவிக்கப்பட்டார்.
இலங்கை கிரிக்கெட் தடை
விக்கெட் வீழ்ந்து இரண்டு நிமிடத்திற்குள் அடுத்த வீரர் பந்தை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்ற விதி காணப்படுகிறது, எனினும் அந்த விதியை பின்பற்ற தவறியதால் இலங்கை அணியின் சகலதுறை வீரர் அஞ்ஜலோ மெத்தியூஸ் ஆட்டமிழந்தவராக அறிவிக்கப்பட்டார்.
இந்நிலையில், 2023 உலகக் கிண்ண ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில், இலங்கை அணி பலபோட்டிகளில் மிகவும் மோசமான முறையில் விளையாடி பல கசப்பான தோல்விகளை பெற்றதை தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட் பேரவை(icc) இலங்கை கிரிக்கெட்டை தற்காலிகமாக தடை செய்துள்ளது.