வரலாற்று சாதனை படைத்த கொழும்பு பங்குச் சந்தை
Sri Lanka
Colombo Stock Exchange
Economy of Sri Lanka
By Sathangani
கொழும்பு பங்குச் சந்தை (CSE) இன்று (21) மற்றுமொரு குறிப்பிடத்தக்க இலக்கினை அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அத்துடன் வரலாற்றில் முதல் முறையாக, அனைத்து பங்கு பங்கு விலைச் சுட்டெண் 16,500 புள்ளிகளைத் தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் S&P SL20 பங்கு விலைச் சுட்டெண் முதல் முறையாக 5,000 புள்ளிகளைக் கடந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இன்றைய மொத்த புரள்வு
நாள் முழுவதும் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 224.01 புள்ளிகள் உயர்ந்து 16,597.16 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது.
இதேவேளை, S&P SL20 விலைச் சுட்டெண் 94.71 புள்ளிகள் உயர்ந்து 5,056.74 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.
இந்த நிலையில் இன்றைய வர்த்தக நாள் நிறைவில் பங்குச் சந்தையின் மொத்த புரள்வு 8.31 பில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
3ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
14ம் ஆண்டு நினைவஞ்சலி