யாழில் இரவுவேளை விசேட அதிரடிப்படையால் ஒருவர் கைது
jaffna
arrested
stf
By Sumithiran
யாழ்ப்பாணம் அச்சுவேலி ஆவரங்கால் பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற கன்ரர் ரக வாகன சாரதியை பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் கைது செய்து , அச்சுவேலி பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
அச்சுவேலி ஆவரங்கால் பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் செல்வதாக பொலிஸ் விசேட அதிரடிப் படையினருக்கு நேற்றைய தினம் சனிக்கிழமை இரவு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் அப்பகுதியில் சுற்றுக்காவல் பணியில் (ரோந்து) ஈடுபட்டிருந்தனர்.
அதன் போது சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி வந்த கன்ரர் ரக வாகனத்தை மடக்கிப் பிடித்து சாரதியை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சாரதியையும் , கைப்பற்றப்பட்ட கன்ரர் வாகனத்தையும் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் ஒப்படைத்துள்ளனர்.
