யாழ் .நெல்லியடியில் இன்றுமாலை இருவரை கைது செய்தது விசேட அதிரடிப்படை
jaffna
arrested
stf
nelliyadi
By Sumithiran
818 கிராம் ஐஸ் போதைப்பொருளை கடத்த முற்பட்டனர் என்ற குற்றச்சாட்டில் இருவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நெல்லியடி நகரம் பருத்தித்துறை வீதியில் வைத்து இன்று மாலை இருவரும் கைது செய்யப்பட்டனர். காங்கேசன்துறை அந்தோனியார்புரத்தைச் சேர்ந்த 33 வயதுடைய ஒருவரும் பருத்தித்துறையைச் சேர்ந்த 24 வயதுடைய ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களாவர்.
சந்தேக நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட 818 கிராம் ஐஸ் போதைப்பொருளின் பெறுமதி 6 மில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
சந்தேக நபர்கள் இருவரும் நெல்லியடி காவல்நிலையத்தில் முற்படுத்தப்பட்டனர். மேலதிக விசாரணைகளை நெல்லியடி காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.
