சபரிமலை சென்றவர் கட்டுநாயக்காவில் கைது
Bandaranaike International Airport
Hatton
By Sumithiran
சபரிமலை செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்துக்குச் சென்ற ஒருவர், விமான நிலையப் பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள் ளார்.
சந்தேக நபரின் பொதிக்குள், ரி-56 துப்பாக்கிக்குரிய தோட்டாக்கள் இருந்ததால், சந்தேகத்தின் பேரில் இவர் கைது செய்யப்பட்டார். மேலதிக விசாரணைக ளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய காவல் நிலையத்தில் இவர் ஒப்படைக்கப்பட்டதாக விமான நிலையத்தின் சிரேஷ்ட அதிகாரி தெரிவித்தார்.
பொதிக்குள் தோட்டாக்கள்
ஹற்றனை வசிப்பிடமாகக் கொண்ட 47 வயதானவரே கைதானார். வத்தளை பிரதேசத்திலுள்ள இரும்பு விற்பனை நிலையத்தில் கொள்வனவு செய்த இவர், அவற்றை இந்தியாவில் விற்பனை செய்யவிருந்தமை விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சந்தேக நபரின்
பொதிக்குள்ளேயே ரி- 56 தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்டன.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்