யாழ் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்
Jaffna
University of Jaffna
Sri Lanka
By Sathangani
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் 39வது பொதுப்பட்டமளிப்பு விழாவின் மூன்றாம் நாளான இன்று (21) நெகிழ்ச்சி சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இன்று யாழ் பல்கலைக்கழகக் கலைப்பீடத்தில் கல்வி கற்று, கற்கை நெறியைப் பூர்த்தி செய்த பின்னர் சுகவீனம் காரணமாக உயிரிழந்த மாணவி ஒருவருக்குத் தேகாந்த நிலையில் கலைமாணிப் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
பெற்றோரிடம் கையளிக்கப்பட்ட பட்டம்
இன்றைய பட்டமளிப்பு விழாவின் முதலாவது அமர்வின் போது சுபீனா குணரத்னம் என்ற மாணவி கலைமாணிப் பட்டத்துக்கு உரித்துடையவராக்கப்பட்டமையை உறுதிப்படுத்தி தேகாந்த நிலையில் அவரது பட்டம் பெற்றோரிடம் கையளிக்கப்பட்டது.
குறித்த பட்டத்தினை பெற்றோரிடம் கையளித்த போது பெற்றோர் கண்ணீர்மல்க பட்டச் சான்றிதழைப் பெற்றுக்கொண்டனர்.
உணர்ச்சி மிகுந்த அந்தத் தருணம் அவையில் இருந்தவர்கள் கண்ணீர் மல்க எழுந்து நின்றதைக் காணக்கூடியதாக இருந்தது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்