சூடுபிடிக்கும் தேர்தல் களம்: மகிந்தவை சந்தித்த ரணில் தரப்பினர்!
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவை (Mahinda Rajapaksa) ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க (Sagala Ratnayaka) விசேடமாக சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
குறித்த சந்திப்பானது, விஜேராமவில் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று (27) இடம்பெற்றுள்ளது.
இந்தநிலையில், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவிற்கு பொதுஜன பெரமுனவின் (SLPP) ஆதரவை வழங்குவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சிரேஸ்ட அதிகாரி
இது குறித்து எதிர்வரும் திங்கட்கிழமை தமது கட்சியின் சிரேஸ்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடி தனது முடிவை அறிவிப்பதாக மகிந்த ராஜபக்ச அறிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.
இதன்போது சாகல ரத்நாயக்கவுடன் இணைந்து அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவும் (Susil Premajeyantha) மகிந்த ராஜபக்சவை சந்தித்து கலந்துரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |