தடம் புரண்ட 'சாகரிகா' தொடருந்து! வெளியாகியுள்ள புதிய அறிவிப்பு
சமீபத்தில் தடம் புரண்ட 'சாகரிகா' தொடருந்து மீண்டும் சேவையில் ஈடுபடுத்தப்படும் என தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.
குறித்த தொடருந்து இன்று (27) முதல் வழக்கம் போல் இயங்கும் என தொடருந்து திணைக்களத்தின் கண்காணிப்பாளர் அசங்க சமரசிங்க தெரிவித்துள்ளார்.
பெலியத்தவிலிருந்து மருதானைக்கு சென்று கொண்டிருந்த சாகரிகா தொடருந்து வாதுவை தொடருந்து நிலையத்தில் தடம் விலகியதன் விளைவாக, அதிலுள்ள 13 பெட்டிகளில் 11 தடம் புரண்டிருந்தன.
பணி இடைநீக்கம்
அதன் காரணமாக, சாகரிகா தொடருந்தின் சாரதி, உதவியாளர், பாதுகாவலர் மற்றும் துணைப் பாதுகாவலர் என நால்வர் தற்காலிகமாகப் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பணிநீக்கம் செய்யப்பட்டவர்களுக்கான விசாரணை முடியும் வரை பணியில் அமர்த்தப்பட மாட்டார்கள் என தொடருந்து திணைக்களம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தொழில்நுட்பக் குறைபாடுள்ள தொடருந்துகளைச் சேவையிலிருந்து விலக்கிக்கொள்ளவும், வேக வரம்புகளுக்கு உட்பட்டு தொடருந்துகளை இயக்கவும் தொடருந்து இயந்திர சாரதிகள் சங்கம் தற்போது தீர்மானித்துள்ளதாக அதன் அமைப்பாளர் இந்திக தொடம்கொட சுட்டிக்காட்டியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
பட்டித்திடல் படுகொலையின் 39ஆவது ஆண்டு நினைவுதினம் 8 மணி நேரம் முன்