மகிந்தவின் தீர்மானத்தினால் நெருக்கடியில் சஜித்
பிரதமர் மகிந்த ராயபக்ச தனது பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக அலரி மாளிகை தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தேசிய ஒருமித்த அரசாங்கத்திற்கு பிரதமரை நியமிக்க இடமளித்து மகிந்த ராயபக்ச பதவி விலகவுள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மகிந்த ராயபக்ச தலைமையிலான குழுவினர் நாளை நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளனர்.
அதன் பின்னர், பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பதவி விலகி எதிர்க்கட்சியில் அமர மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
பொதுஜன பெரமுன எதிர்க்கட்சியில் அமர வைத்த பின்னர், எதிர்க்கட்சியில் பெரும்பான்மையை காட்டி எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பெற்றுக்கொள்ள தயாராகி வருவதாக அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.
இந்த தீர்மானத்தினால் சஜித் பிரேமதாச எதிர்க்கட்சி தலைவர் பதவியை இழக்கும் நிலை ஏற்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.
இது பற்றிய விரிவான செய்திகளையும் மேலும் பல முக்கிய செய்திகளையும் தெரிந்து கொள்ள எமது மாலை நேர பிரதான செய்திகளுடன் இணைந்திருங்கள்,
