வடக்கிற்கு வருகிறார் சஜித் - பல்வேறு நிகழ்வுகளுக்கும் ஏற்பாடு
Srilanka
Sajith Premadasa
Northern province
Travels
By Mkkamshan
ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் எதிர்க்கட்சி தலைவரான சஜித் பிரேமதாச (Sajith Premadasa) ஆறு நாட்கள் பயணம் மேற்கொண்டு வடமாகாணத்திற்கு வருகை தரவுள்ளார்.
வடக்கு மாகாணத்துக்கான பயணத்தை ஜனவரி 7இல் ஆரம்பிக்கும் அவர் முதலாவதாக வவுனியா, மன்னார் மாவட்டங்களில் நடைபெறும் நிகழ்வுகளில் பங்கேற்பதுடன் ஜனவரி 9ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ளார்.
ஜனவரி 10ம் திகதி கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு செல்லும் சஜித் பிரேமதாஸ ஜனவரி 11 மற்றும் 12ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் நடக்கும் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளார்.
இதன்போது பாடசாலைகள் மற்றும் வைத்தியசாலைகளுக்கு உதவிகள் வழங்கி வைக்கப்படவுள்ளதுடன் பல்வேறு சந்திப்புகளையும் கூட்டங்களையும் நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி